மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆடிட்டர் பலி
விருகம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆடிட்டர் பலியானார்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் ராஜ்கணேஷ் (வயது 21). இவர், தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை ராஜ்கணேஷ், சாலிகிராமம் நாவலர் மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது மோட்டார்சைக்கிள், அருகில் உள்ள வீட்டின் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராஜ்கணேஷ், பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.