செங்கவரிக்கை மாம்பழ சீசன் தொடங்கியது: திருவட்டாரில் கிலோ ரூ.160-க்கு விற்பனை

செங்கவரிக்கை மாம்பழ சீசன் தொடங்கியது

Update: 2022-04-30 21:15 GMT
திருவட்டார், 
கன்னியாகுமரி மாவட்டத்தில்  தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் விளையும் செங்கவரிக்கை மாம்பழம் பொதுமக்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றுள்ளது. இந்த மாம்பழம் தற்போது நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், திருவட்டார், குலசேகரம் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கிடைக்கிறது. திருவட்டாரில் ஒரு கிலோ செங்கவரிக்கை மாம்பழம் ரூ.160 என விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்