குமரியில் சாரல் மழை: அதிகபட்சமாக தக்கலையில் 37.3 மி.மீ. பதிவு

குமரியில் சாரல் மழை அதிகபட்சமாக தக்கலையில் 37.3 மி.மீ. பதிவு

Update: 2022-04-30 21:09 GMT
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தக்கலையில் 37.3 மில்லி மீட்டர் மழை பதிவானது. 
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி- 25.6, சிற்றார் 1-15.2, பேச்சிப்பாறை- 22.2, பெருஞ்சாணி- 13.4, புத்தன் அணை- 14.2, சுருளோடு- 22.6, இரணியல்- 24, அடையாமடை- 11, முக்கடல் அணை- 19 என பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்