நன்னடத்தை பிணையை மீறிய 2 பேருக்கு சிறை

கூடங்குளத்தில் நன்னடத்தை பிணையை மீறிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2022-04-30 20:18 GMT
நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த ராஜ் மகன் பாலன் என்ற ஆண்டி பாலன் (வயது 23). இவர் மீது கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளது. இதையொட்டி பாலனுக்கு நிர்வாகதுறை நடுவர் முன்னிலையில் 1 ஆண்டுக்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி கிணற்று சரள் மண் திருடியதாக பாலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் கூடங்குளத்தை சேர்ந்த தங்கப்பன் மகன் சிங் என்ற சிங்கராஜா (36) என்பவர் மீதும் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் 13 வழக்குகள் உள்ளது. இவரிடமும் 1 ஆண்டுக்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. ஆனால் கடந்த 20-ந் தேதி இவர் ஆடு திருடியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டது தொடர்பாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, ராதாபுரம் 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் மீது விசாரணை நடத்திய நடுவர், பிணையை மீறி குற்றம் செயலில் ஈடுபட்டதற்காக பாலனை 11 மாதங்களும், சிங்கராஜாவை 9 மாதங்களும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்