கோழிப்பண்ணை சேதம் அடைந்து 50 கோழிகள் செத்தன

சூறாவளி காற்றுக்கு கோழிப்பண்ணை சேதம் அடைந்து 50 கோழிகள் செத்தன. 1000 பப்பாளி மரங்களும் முறிந்து விழுந்தது.

Update: 2022-04-30 18:25 GMT
பொங்கலூர்
சூறாவளி காற்றுக்கு கோழிப்பண்ணை சேதம் அடைந்து  50 கோழிகள் செத்தன. 1000 பப்பாளி மரங்களும் முறிந்து விழுந்தது.
50 கோழிகள் செத்தன
பொங்கலூர் அருகே உள்ள கருணைபாளையத்தை சேர்ந்தவர் சேகர். விவசாயி.  இவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பொங்கலூர் பகுதியில் மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெறுக்கெடுத்து ஓடியது. 
மழை பெய்யும் போது சூறாவளி காற்று வீசியதால் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னை மரம் முறிந்து சேகரின் கோழிப்பண்ணை மீது விழுந்தது. இதனால் கோழிப்பண்ணை கடுமையான சேதம் அடைந்து சரிந்து விழுந்தது. மேலும் பண்ணையில் இருந்த  50- கோழிகள் செத்தன.
பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தன
அதுபோல் அதே பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்பவரது தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் பலத்த காற்றால் முறிந்து விழுந்தது. இதனால் பிஞ்சு பப்பாளி காய்கள் அவரது தோட்டம் முழுவதும் சிதறிக்கிடந்து. இதை பார்த்து விவசாயி கண்ணீர் வடித்தார். ஏனெனில் இந்த பப்பாளி காய்களை பறித்து இனிதான் விற்பனைக்கு அனுப்ப முடிவு செய்து  இருந்தார். அதற்குள் அவை அனைத்தும் காற்றில் முறிந்து விழுந்து விட்டது. விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதே பப்பாளியை சாகுபடி செய்து அறுவடைக்கு கொண்டு வரவேண்டும் என்றால் ஓராண்டுக்கு மேலாகும். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை, கால்நடைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்