மத்தூர் அருகே வியாபாரி வீட்டில் நகை திருட்டு

மத்தூர் அருகே வியாபாரி வீட்டில் நகை திருட்டு போனது.

Update: 2022-04-30 17:27 GMT
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள சுண்ணாம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 60). வளையல் வியாபாரி. நேற்று முன்தினம் காலை ஸ்டாலினும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி  வளையல் வியாபாரம் செய்ய சென்றனர். மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. இதை கண்ட ஸ்டாலின் உள்ளே சென்று பார்த்தபோது. வீட்டில் பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ஸ்டாலின் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்