கள் இறக்கி விற்க அனுமதிகோரி விக்கிரவாண்டியில் 100-வது நாளாக போராட்டம்
கள் இறக்கி விற்க அனுமதிகோரி விக்கிரவாண்டியில் 100-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி,
தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு பனையேரிகள் பாதுகாப்பு இயக்கம் ஆகியன இணைந்து, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க கோரி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் விக்கிரவாண்டி அடுத்த பூரிகுடிசையில் தொடர்ந்து உரிமை மீட்பு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் நேற்று 100-வது நாளாக நீடித்தது.
போராட்டத்துக்கு தமிழ்நாடு கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கி, போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக சங்க தலைவர் சிவக்குமார் வரவேற்றார். போராட்டத்தில் சட்ட ஆலோசகர் வக்கீல் அய்யப்பன், தமிழ்நாடு சீர்திருத்த இயக்க தலைவர் ஜெயசீலன், வேலு,
கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, நிர்வாகிகள் பார்த்தசாரதி, செல்வம், பாண்டியன், பாரதி கண்ணன், செல்வராமலிங்கம் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
போராட்டத்தில், விக்கிரவாண்டி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் நன்றி கூறினார்.