நாம் தமிழர் கட்சியினர் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சியினர் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-30 16:45 GMT
வேலூர்

நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. வேலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பூங்குன்றன் தலைமை தாங்கினார். 

காட்பாடி சட்டமன்ற தொகுதி செயலாளர் மணிகண்டன், வேலூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஜெயக்குமார், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் சசிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் பிரகலதா ராம், சுமதி கபிலன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் கார்த்தி விஜயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, சொத்துவரி, சுங்க கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து மேளம் அடித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்