நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-30 16:08 GMT
வெளிப்பாளையம்:
நாகை அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிவேல், மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆதித்தன், நாகை சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், சுங்க சாவடி கட்டண உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்