முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முயற்சி; குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் கைது
தடையை மீறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முயற்சித்ததாக குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் கைது செய்யப்பட்டார்.
வேடசந்தூர்:
குடகனாறில் முறையாக தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு 2 ஆண்டுகள் ஆகியும் அறிக்கை அளிக்கவில்லை. இது குறித்து தமிழக முதல்-அமைச்சர், கவர்னர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகளிடம் குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் திண்டுக்கல் வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக அனுமதி கேட்டு, கடந்த 21-ந் தேதி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். ஆனால் முதல் அமைச்சரை சந்திக்க அனுமதியளிக்கவில்லை.
இந்தநிலையில் போலீஸ் தடையை மீறி, குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி தலைமையில் முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி வேடசந்தூர் ஆத்துமேட்டில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி திண்டுக்கல்லுக்கு புறப்பட தயாராக இருந்தார். இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கூம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.