தடைசெய்யப்பட்ட சிகரெட் விற்ற 7 கடைக்காரர்களுக்கு அபராதம்

கிணத்துக்கடவு பகுதியில் தடைசெய்யப்பட்ட சிகரெட் விற்ற 7 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-04-30 14:50 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. 

இதன்பேரில் கோவில்பாளையம், காளியண்ணன்புதூர் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பெட்டிகடைகளில் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேலு, சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், சரவணகுமார், செல்வம், ரகுவரன், கார்த்திகேயன், பூபதி ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். 

அப்போது, கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கருப்பு சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கபட்டது. இதனையடுத்து கருப்பு சிகரெட் விற்பனை செய்த 7 கடைக்காரர்களுக்கு தலா ரூ.600 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடைக்காரர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்