போதை பொருட்கள் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது - தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி பேட்டி
தாம்பரம் அருகே போதை பொருட்கள் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி கூறினார்.
தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேர்வு குறித்த ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி கலந்துகொண்டு, தேர்வுக்கு தயாராவது, தேர்வு முடியும் வரை எடுத்து கொள்ளும் உணவு முறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக ஆலோசனை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் கமிஷனர் ரவி கூறியதாவது:-
தாம்பரம் மாநகர போலீஸ் எல்லையில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. போதை பொருட்கள் மற்றும் சாக்லெட்டுகள் விற்பனையை தடுக்க, அவற்றை விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர். குட்கா, பான்மசாலா விற்பனையை தடுக்கவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.