மோட்டார் சைக்கிள்களை திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மோட்டார் சைக்கிள்களை திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-04-29 23:16 GMT
திருச்சி:
கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி திருச்சி கோட்டை பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் பறித்துச் சென்றதாக ராஜா என்ற சகாய ஆரோக்கிய தர்மராஜ் (வயது 57) என்பவரை ேபாலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில். இவர் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியதாக 6 வழக்குகளும், திருப்பூர் மாவட்டத்தில் 11 வழக்குகளும், திருச்சியில் கார் திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், மேலும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 22 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின்பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், குண்டர் தடுப்பு சட்டத்தில் ராஜாவை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் இருக்கும் ராஜாவுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்