வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2022-04-29 23:16 GMT
மணப்பாறை:

மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் அய்யப்பன் கோவில் அருகே வசித்து வருபவர் சுப்ரமணியன்(வயது 50). இவர் கரூர் போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். நேற்று வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் சென்றுவிட்ட நிலையில், பின்னர் சுப்ரமணியனின் மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கதவில் இருந்து பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 8½ பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக மணப்பாறை போலீசாருக்கு அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்