வடக்கன்குளம்:
வடக்கன்குளம் பழவூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பஸ் டிரைவராக வெள்ளமடம் அனந்தபத்மநாதபுரத்தை சேர்ந்த வேணு (வயது 33) என்பவர் இருந்தார். இவர் நேற்று மதியம் பஸ்சை சர்வீஸ் செய்துகொண்டு இருந்தார். அப்போது, திடீரென்று மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேேய வேணு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.