வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-04-29 20:08 GMT
சிவகிரி:

சிவகிரி வனச்சரகம் ராஜசிங்கப்பேரி கண்மாய் அருகில் வன விலங்குகளை வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் அன்பழகன் (வயது 26), கனியராஜ் மகன் விஜயராஜ் (21) ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜெயிலில் அடைத்தனர்.

பின்னர் வெளியே வந்த 2 பேரும் தொடர்ந்து வன விலங்குகளை வேட்டையாடி வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என நெல்லை மண்டல வனப்பாதுகாவலர் செந்தில்குமார், நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன் ஆகியோர் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.இதையடுத்து கலெக்டர் கோபாலசுந்தரராஜ் உத்தரவின்பேரில் சிவகிரி வனச்சரக உதவி வனபாதுகாவலர் (பயிற்சி) மணிகண்ட பிரபு, 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்