விவசாயிகளுக்கு பயிற்சி

பரமக்குடி அருகே உள்ள மேலாய்குடி கிராமத்தில் மண் வள அட்டை திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-04-29 19:16 GMT
பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள மேலாய்குடி கிராமத்தில் மண் வள அட்டை திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.மாவட்ட தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் கலந்து கொண்டு மண் வள அட்டையின் முக்கியத்துவம், பயிர்களுக்கு சமச்சீர் உரமிடுதல் மற்றும் மண்வள பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கிருத்திகா, வேளாண்மை அலுவலர் அழகுசுந்தரம், சுருளி வேலு, உதவி வேளாண்மை அலுவலர் பிரீத்தி ஆகியோர் மண் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்து விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோசலா தேவி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்