1,000 மதுபாட்டில்கள் அழிப்பு
கள்ளக்குறிச்சியில் 1,000 மதுபாட்டில்களை கிழே கொட்டி போலீசார் அழித்தனர்.
கள்ளக்குறிச்சி
கடந்த 2013-ம் ஆண்டு புதுச்சேரியிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு கடத்தி வரப்பட்ட ஆயிரம் மது பாட்டில்களை கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இந்த மது பாட்டில்களை கீழே கொட்டி அழிக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் குறிப்பிட்ட மதுபாட்டில்களை கள்ளக்குறிச்சியில் ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் மது பாட்டில்களையும் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.