தினத்தந்தி செய்தி எதிரொலி: பழமையான அரசமரம் அகற்றம்

தினத்தந்தி செய்தி எதிரொலியாக பழமையான அரசமரம் அகற்றப்பட்டது.

Update: 2022-04-29 18:14 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம், 
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 5-வது வார்டு பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான அரச மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் சமூக விரோதிகள் ஆசிட் ஊற்றியதால் பட்டுப்போய் காய்ந்த நிலையில் மின் இணைப்புகள் மீது எந்த நேரத்திலும் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும். இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சார்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பழமையான மரத்தை அகற்றி அப்புறப்படுத்தினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்