விவசாய கடன் அட்டைக்கான முகாம்

காவேரிப்பாக்கம் பகுதியில் விவசாய கடன் அட்டைக்கான முகாம் நடைபெற்றது.

Update: 2022-04-29 17:40 GMT
காவேரிப்பாக்கம்

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கடந்த 24-ந் தேதி முதல் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தர்மநீதி, கீழ் வீராணம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பங்களை வங்கி பாஸ்புத்தகம், சிட்டா, அடங்கல், ஆதார், பான் கார்டு உள்ளிட்ட நகல்களுடன் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம். 

விவசாயிகள் விவசாய கடன் அட்டை பெற்று பயன்பெறுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் கேட்டுக்கொண்டார். இதில் வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர் அட்சயா, ஸ்வேதா, விஷ்ணு சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்