உத்தனப்பள்ளி அருகே பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

உத்தனப்பள்ளி அருகே பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-29 17:36 GMT
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே உள்ள சின்ன நாகதுணை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் நேற்று முன்தினம் தனியார் பஸ்சில் ஏறினார். தனது கிராமத்தில் இறக்கி விடுமாறு டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கேட்டுள்ளார். ஆனால் பெரிய நாகதுணையில் தான் பஸ் நிற்கும் என அவர்கள் கூறி விட்டனர். பின்னர் சின்ன நாகதுணை அருகே பஸ்சை நிறுத்தி கிருஷ்ணமூர்த்தியை இறக்கி விட்டனர். இதை அறிந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் சம்பத்குமார் (வயது 25), உறவினரான சிவராஜ் (35) ஆகியோர் நேற்று காலை சின்ன நாகதுணை அருகே தனியார் பஸ்சை வழிமறித்து டிரைவர் ஆறுமுகம் (53)த்தை  தாக்கினர். இது குறித்து டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜ், சம்பத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்