கோவை
கோவை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 979 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 350 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 12 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.