பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு
கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்முக தேர்வுக்கு வந்த திருச்சி பெண்ணிடம் 7½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை
கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்முக தேர்வுக்கு வந்த திருச்சி பெண்ணிடம் 7½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
நேர்முக தேர்வு
திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி வெங்கடேசுவரி (வயது 29). சம்பவத்தன்று இவர் கால்நடை உதவியாளர் நேர்முக தேர்விற்காக மதுரைக்கு வந்திருந்தார். இங்கு மேல அனுப்பானடியில் உள்ள அவரது தம்பி வீட்டில் தங்கியிருந்து தேர்வுக்கு செல்வதற்கு தயாராக இருந்தார்.
இந்த நிலையில் தேர்வு ரத்தானது. அன்றைய தினம் அவரது குழந்தை அழுது கொண்டே இருந்ததால் தர்காவில் மந்திரித்து கயிறு கட்டுவதற்காக தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது காமராஜர்சாலை சவுராஷ்டிரா பள்ளி அருகே அவர் தர்காவிற்கு சென்று நின்று கொண்டிருந்தார்.
விசாரணை
அந்த நேரத்தில் ஒருவர் வெங்கடேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.