திருநங்கைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
திருநங்கைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வேலூர்
வேலூர் மாவட்ட மாற்றுத்தீர்வு மையத்தில் திருநங்கைளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான வசந்தலீலா தலைமை தாங்கினார். சிறப்பு சார்பு நீதிபதி ஜோதி, வேலூர் வழக்கறிஞர் சங்கத்தலைவர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல் கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முகாமில் திருநங்கைகளுக்கு சட்ட விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இதில் திருநங்கைகள், திருநம்பிகள் பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கு பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.