போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை

பண்ருட்டி அருகே போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2022-04-29 16:34 GMT
புதுப்பேட்டை, 

பண்ருட்டி அருகே உள்ள பாலூர் சன்னியாசிபேட்டையை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராஜா (வயது 22). செங்கல் சூளை தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு செம்மேடு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ராஜா, மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் சிறுவத்தூரில் உள்ள அங்காளம்மன் கோவில் அருகில் வைத்து விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி, ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்