தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-29 15:04 GMT
திருவாரூர்:
பணி நிரவல் கலந்தாய்வில் கூடுதல் மற்றும் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றில் பணியமர்த்தப்பட்ட பணியிடங்கள் ஆசிரியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே பெற்று வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருணா காளிதாசன் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொருளாளர் துரைராஜ் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிரணி செயலாளர் கரோலி அற்புதராணி, முன்னாள் நாகை மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும்  வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் கார்த்தி வரவேற்றார். முடிவில் மாவட்ட அமைப்புச்செயலாளர் ஆதித்தன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்