முன்னாவல்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இருக்கைகள்
முகநூல் வழியாக பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று முன்னாவல்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இருக்கைகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்்கினார்.
நீடாமங்கலம்:
முகநூல் வழியாக பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று முன்னாவல்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இருக்கைகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்்கினார்.
முகநூல் வழியாக கோரிக்கை
திருவாரூர் மாவட்ட கலெக்டரின் முகநூல் வழியாக கோரிக்கைகள் பெறப்பட்டு, அதற்கு தீர்வுகள் காணப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நீடாமங்கலம் ஒன்றியம் முன்னாவால்கோட்டை கிராமத்திலிருந்து முகநூல் வழியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று தீர்வு காணும் வகையில் மாவட்ட கலெக்டர் தனது விருப்ப நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 600 மதிப்பில் 60 இருக்கைகள், 15 வட்ட மேஜைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.
பரிசுகள்
அதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்செல்வன், தலைமையாசிரியர் பழனிசெல்வி, ஒன்றிய கவுன்சிலர் நடனசிகாமணி, ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பினர் கலந்து கொண்டனர்.
-