பீடி பற்ற வைத்தபோது உடலில் தீப்பிடித்து கொத்தனார் சாவு: வலிக்காக மண்எண்ணெய் தேய்த்து கொண்டதால் விபரீதம்

குன்றத்தூர் அருகே வலிக்காக மண்எண்ணெய் தேய்த்து கொண்டு பீடி பற்ற வைத்த போது உடலில் தீப்பிடித்து கொண்டதால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-04-29 09:20 GMT
பூந்தமல்லி,  

குன்றத்தூரை அடுத்த நத்தம் கொல்லை தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). கொத்தனார். நேற்று முன்தினம் சேகர், வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மது குடித்திருந்ததாக தெரிகிறது. உடல் வலிக்காக கை, கால்களில் மணஎண்ணெய் தேய்த்து கொண்டு அமர்ந்து இருந்தார்.

சிறிது நேரத்தில் பீடி பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பொறி உடலில் விழுந்து தீப்பிடித்து கொண்டது. உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஸ்ரீமதி, கணவர் உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு அனுமதிக்கப்பட்ட சேகர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்