கடைக்குள் புகுந்து ரூ.1.12 லட்சம் திருட்டு
கடைக்குள் புகுந்து ரூ.1.12 லட்சம் திருட்டுபோனது.
திருச்சி:
திருச்சி புத்தூர் அருணாநகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர், வயலூர் ரோடு குமரன்நகரில் உணவு பொருட்கள் வினியோகம் செய்யும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வழக்கம்போல வீடு திரும்பினார். மறுநாள் கடைக்கு வந்தபோது, அங்கு கடையின் பூட்டு திறக்கப்பட்டு, கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இது குறித்த புகாரின்பேரில், திருச்சி அரசு ஆஸ்பத்திரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.