மகளிடம் பாலியல் சீண்டல்; தந்தை போக்சோவில் கைது
மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த 36 வயது கூலி தொழிலாளிக்கு, ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் அவர் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி, துன்புறுத்தியுள்ளார். மேலும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகளை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அந்த தொழிலாளி மீது லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.