மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

Update: 2022-04-28 23:30 GMT
கே.கே.நகர்:
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான (ஆண்கள் மற்றும் பெண்கள்) மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருச்சி மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவராசு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மண்டல முதுநிலை மேலாளர் இராம சுப்பிரமணியராஜா வாழ்த்தி பேசினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசுகந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காதுகேளாதோர் ஆகிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் மற்றும் இறகுபந்து, மேஜைப்பந்து, கபடி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் மாற்றுத்திறனுைடய சுமார் 400 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி கமாண்டன்ட் ஆனந்தன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடத்தை பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்