மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்
சிவகிரி அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சிவகிரி:
சிவகிரி அருகே ராயகிரி சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. சங்கரன்கோவில் உதவி கலெக்டர் (பொறுப்பு) குணசேகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் செல்வகுமார் முன்னிலை வகித்தார். முன்னோடி மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சமூக பாதுகாப்பு திட்டத்தில் 13 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை, 7 பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு, விவசாயிக்கு நெல் பயிரில் களையெடுக்கும் கருவி வழங்கப்பட்டது.
உணவுப்பொருள் வழங்கல் தாசில்தார் சத்தியவள்ளி, சமூகநல தாசில்தார் திருமலைச்செல்வி, துணைத்தாசில்தார் மைதீன் பாட்ஷா, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ராமலட்சுமி, வீரசேகர், ஜெயப்பிரகாஷ், பாக்கியராஜ், வாசுதேவநல்லூர் யூனியன் ஆணையாளர் ஜெயராமன், உதவி வேளாண்மை அலுவலர் அரவிந்த், ராயகிரி நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் மோகனமாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.