ஏ.ஐ.டி.யு.சி. அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-04-28 19:10 GMT
கரூர்
கரூர், 
கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு  ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மத்திய சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் கவுரவ தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். போக்குவரத்து கழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டியும், 2 ½ ஆண்டுகள் ஆன பின்பும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் உருவாக்கப்படாமல் உள்ளதை கண்டித்தும், 78 மாதங்களாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு டி.ஏ. வழங்காததை கண்டித்தும், தேவையான ஊழியர்களை பணியமர்த்தக்கோரியும், 2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்