சிறப்பு மருத்துவ முகாம்

சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-04-28 19:04 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம், 
கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டசோழபுரத்தில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி தலைவர் சவுந்தரபிரியா தொடங்கி வைத்தார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நிறைமதி தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர். மேலும் இசிஜி, ஸ்கேன், நீரிழிவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்