குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து கிராமநிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி பட்டறை

குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து கிராமநிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது.

Update: 2022-04-28 18:56 GMT
கரூர்
கரூர், 
குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி பட்டறை கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பேசுகையில், கரூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதை கண்டறிய 40 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி நடைபெற உள்ளது.  கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு அதில் கிராம ஊராட்சி தலைவர்கள் தலைவர்களாகவும், கிராம நிர்வாக அலுவலர்கள் செயலர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த குழுவை மாதந்தோறும் தவறாமல் கூட்டி குழந்தை திருமண தடுப்பு தொடர்பாக ஆலோசிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகிய நீங்கள் குழந்தை திருமணத்தை தடுக்கும் ஒரு செயலை தடுத்தால் ஒரு தலைமுறையின் முடிவையே மாற்றிவிடலாம் என்றார். 

மேலும் செய்திகள்