விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள எட்டுநாயக்கன்பட்டி ஆசிரியர் காலனியில் வசிப்பவர் ஜெகதீசன்(வயது 43). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியை சூலக்கரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். இருவரும் ஆஸ்பத்திரியில் இருந்துவீடு திரும்பியபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.