நகர்ப்புற ஏழைகள் வாழ்விட மேம்பாட்டு குழு கூட்டம்

ராமநாதபுரத்தில் நகர்ப்புற ஏழைகள் வாழ்விட மேம்பாட்டு குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-04-28 18:35 GMT
ராமநாதபுரம்,

மதுரையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திட்ட செயலாக்க கோட்டம் மூலமாக ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற ஏழைகள் வாழ்விட மேம்பாட்டு குழு கூட்டம் ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும் நகர்ப்புற ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் சாதகமான சூழலை உருவாக்கிட, பல்வேறு அரசு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தி பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் சென்றடையவும், சுகாதாரமற்ற பகுதிகளில் வாழும் குடும்பங்களின் குறைகளை நிவர்த்தி செய்வது போன்ற கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பார்வை பொறியாளர் சுந்தரராஜன், நிர்வாக பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி நிர்வாக பொறியாளர் அசோகன், உதவி பொறியாளர் கேர்லின் ரீட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்