சோளிங்கர்
சோளிங்கர் அருகே சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜை செய்யப்பட்டு பல வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜை செய்யப்பட்டு அருகம்புல் மாலை, மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.