விநாயகர் கோவில் கேட்டை உடைத்த காட்டு யானைகள்

மருதமலை மலைப்பாதையில் விநாயகர் கோவில் கேட்டை உடைத்த காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

Update: 2022-04-28 16:41 GMT
வடவள்ளி

கோவை மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் காட்டுயானைகள், மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வனபகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி மருதமலை அடிவாரத்தில் நடமாடி வருகின்றன.

 இந்த நிலையில் தடாகம் பகுதியில் இருந்து வந்த காட்டுயானைகள் மருதமலை மலைப்பகுதியை கடந்து தான்தோன்றி விநாயகர் கோவில் அருகே வந்தன. பின்னர் காட்டு யானைகள் கோவிலன் இரும்பு கேட்டை உடைத்து அட்டகாசம் செய்தன.

 இதையடுத்து காட்டு யானைகள் அங்கிருந்து மடுவு பகுதிக்கு சென்றன. அதிகாலை நேரம் என்பதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்