உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் கோவிலுக்கு பூட்டு
வேடசந்தூர் அருகே உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் கோவிலுக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளனம்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ரத்தினம். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அகரமுத்துக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்தினம் தரப்பினர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதனையடுத்து அகரமுத்து தரப்பினர் கோவில் கதவுக்கு பூட்டு போட்டு பூட்டினர்.
இந்தநிலையில் ரத்தினம் தரப்பினர் நேற்று கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பூட்டை கொண்டு கோவில் கதவை பூட்டினர். மாறி, மாறி இருதரப்பினரும் கோவில் கதவுக்கு பூட்டு போட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக இருதரப்பினரும் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.