மணல் கடத்திய 2 பேர் கைது

ஆற்காடு அருேக மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-28 16:17 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை, ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பாலாற்று படுக்கையில் மணல் கடத்துவதாக ஆற்காடு தாலுகா போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்காடு அருகே சக்கரமல்லூர் பாலாற்றில் வேனில் மணல் ஏற்றிக்கொண்டு இருந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஆற்காடு பி.டி.ஈஸ்வரன் தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 30), ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சஞ்சய் (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. 

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்