தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை
விஜயநகர் மாவட்டத்தில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி தாலுகா திருவடய நிட்டவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தன்யகுமார் (வயது 26). இவர் நேற்று இரவு தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட வீட்டில் இருந்து சென்றார். ஆனால் இரவு அவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை கிராமத்தில் உள்ள காலி நிலத்தில் ரத்தவெள்ளத்தில் தன்யகுமார் இறந்தார்.
அவரது தலையில் மர்மநபர்கள் கல்லை போட்டு கொலை செய்து இருந்தனர். ஆனால் தன்யகுமாரை கொலை செய்தது யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஹரப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர். விரைவில் அவர்களை கைது செய்வதாக போலீசார் கூறினர்.