தூத்துக்குடியில் மளிகை கடைக்காரர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
தூத்துக்குடியில் மளிகைக்கடைக்காரரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் மகராஜன் (வயது 39). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. கடந்த 26.4.2022 அன்று மகராஜன் அவரது கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த குமார் மற்றும் அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கனிராஜ் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து மகராஜனிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து மகராஜன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்கு பதிவு செய்த குமார், கனிராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.