கஞ்சா கடத்தியவர் கைது
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா தலைமையிலான போலீசார், துரைச்சாமிபுரம் அருகே உள்ள ஓடை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.
போலீசாரை கண்டதும் அவர்களில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் மோட்டார் சைக்கிளுடன் போலீசாரிடம் சிக்கி கொண்டார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர், நிலக்கோட்டை அருகே உள்ள வாலாங்கோட்டையை சேர்ந்த சுரேஷ் (வயது 52) என்று தெரியவந்தது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தபோது, அதில் இருந்த பையில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது.
மோட்டார் சைக்கிளில் இவர் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். மேலும் கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் தப்பி ஓடிய வாலாங்கோட்டையை சேர்ந்த தென்னவன், நிலக்கோட்டையை சேர்ந்த ஆனந்தகுமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.