பாப்பிரெட்டிப்பட்டி அருகே மது விற்ற முதியவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-27 21:12 GMT
மொரப்பூர்:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோபாலபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 67) என்பவர் வீட்டின் அருகில் மதுபாட்டில்கள் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்