பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது

சேலம் சீலநாயக்கன்பட்டியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-27 21:11 GMT
அன்னதானப்பட்டி:-
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாமியப்பா நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்த விவேக் மனைவி பிரியதர்ஷினி (வயது 34). கடந்த 12-ந் தேதி இவர், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்கி விட்டு மொபட்டில் வீடு திரும்ப முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், பிரியதர்ஷினி கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் பகுதியைச் சேர்ந்த பிராங்ளின் குமார் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிராங்ளின் நண்பர் முகமது பாரூக்கை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்