சேலம் அரசு கல்லூரி பேராசிரியர் பணி இடைநீக்கம்
பாலியல் வன்கொடுமை புகாரில் சேலம் அரசு கல்லூரி பேராசிரியர் பணி இடைநீக்கம் ய்யப்பட்டுள்ளார்.
சேலம்:-
சேலம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சீனிவாசன். இவர் மீது கல்லூரி பேராசிரியை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து அந்த புகார் மீது உண்மை தன்மை அறிய விசாரணை குழு அமைத்து சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர் சீனிவாசன் மற்றும் கல்லூரி பேராசிரியை ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் அறிக்கை விவரம் கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளும் பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக உதவி பேராசிரியர் சீனிவாசனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்தநிலையில் பாலியல் வன்கொடுமை செய்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர் சீனிவாசனை பணி இடைநீக்கம் செய்து உயர் கல்வித்துறை இயக்குனர் பூர்ணசந்திரன் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான உத்தரவு நகல் கல்லூரி முதல்வருக்கும், உதவி பேராசிரியருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.