மெட்ரோ ரெயிலில் தினமும் 3½ லட்சம் பேர் பயணம்

பெங்களூரு மெட்ரோ ரெயிலில் தினமும் 3½ லட்சம் பேர் பயணிக்கிறார்கள்.

Update: 2022-04-27 20:59 GMT
பெங்களூரு:

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு முன்பாக பெங்களூருவில் தினமும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்கள். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பின்பு மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சமாக குறைந்தது. 

இதனால் மெட்ரோ ரெயில் நிா்வாகத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து பெங்களூரு சகஜநிலை திரும்பி இருப்பதால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அதன்படி, மெட்ரோ ரெயிலில் தினமும் 3 லட்சத்து 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்