புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன் கோட்டை உக்கடை நேரு சாலையில் உயர் அழுத்த மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தின் மேற்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள்,பொன்னவராயன் கோட்டை.
சாலை வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் சென்னம்பட்டி ஊராட்சியில் அம்பலக்காரர் தெரு உள்ளது . இந்த தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி இல்லாததால் மண் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மண் பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்கி காணப்படுதால், துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ளளளஇதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த பாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் வடிகால் வசதியோடு, சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், சென்னம்பட்டி தஞ்சாவூர்.