மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கரூர் அணி முதலிடம்
மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கரூர் அணி முதலிடம் பெற்றது.
கரூர்,
கரூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்து. இதில் திருச்சி, கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், முதலிடத்தை கரூர் அரசு கலைக்கல்லூரி அணியும், 2-வது இடத்தை திருச்சி மாவட்டம் லால்குடி அணியும், 3-வது இடத்தை திண்டுக்கல் மாவட்ட அணியும் பெற்றன. இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து முதலிடம் பெற்ற கரூர் அரசு கலைக்கல்லூரி அணியை, கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் பாராட்டினர்.